# மாவட்ட அளவிலான வரிசெலுத்துவோர் ஆலோசனைக்குழு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்படும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுதுறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

> வரி செலுத்துவோரின் குறைகளைத் தீர்க்கவும், விற்பனை வரி தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான வரி செலுத்துவோர் ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இக்குழுக்கள் நவம்பர் 2029 வரை செயல்படும், முதல் கூட்டம் டிசம்பர் 15, 2026க்குள் நடத்தப்பட வேண்டும்.
- **Published**: 2026-11-04
- **URL**: https://news.nammamap.in/press-release/22918-tamil-nadu-forms-district-taxpayers-advisory-committee

---

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட அளவிலான வரி செலுத்துவோர் ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்படும்.

இக்குழுக்கள் வரி செலுத்துவோரின் குறைகளைத் தீர்க்கவும், மாவட்ட அளவில் விற்பனை வரி தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்கவும் செயல்படும்.

அனைத்து கோட்ட இணை ஆணையர் (மாநிலவரி) அவர்களும் இக்குழுவினை 2026 நவம்பர் 30க்குள் தங்கள் மாவட்டத்தில் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்குழுவானது 2029 நவம்பர் 30 வரை செயல்பாட்டில் இருக்கும்.

இக்குழுவின் முதல் கூட்டத்தினை 2026 டிசம்பர் 15க்குள் நடத்த வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)