# திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 10 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

> தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 2027-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகள் உள்ளிட்ட 10 வகையான விருதுகளுக்குத் தமிழ்நாடு அரசு விண்ணப்பங்களை வரவேற்கிறது. புதிதாக கண்ணியமிகு காயிதே மில்லத் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-11-05
- **URL**: https://news.nammamap.in/press-release/22927-applications-invited-tamil-nadu-government-awards

---

2027-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கான பிற விருதுகள் உள்ளிட்ட 10 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2026-ஆம் ஆண்டில் புதியதாக கண்ணியமிகு காயிதே மில்லத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதாளர்களுக்கு ரூ.5.00 இலட்சம் ரொக்கப் பரிசு, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15.12.2026.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)