# வானில் உயரமாக சென்று வெடிக்கும் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கை பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிப்பதில் அலட்சியம் வேண்டாம்! பாதுகாப்பே முதன்மையானது!

> தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகளை கையில் பிடித்து வெடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கவும், குறிப்பாக குழந்தைகள் பெற்றோரின் மேற்பார்வையில் வெடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- **Published**: 2026-11-07
- **URL**: https://news.nammamap.in/press-release/22944-firecracker-safety-diwali-tamil-nadu

---

வானில் உயரமாக சென்று வெடிக்கும் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கை பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கக் கூடாது.

பட்டாசு வெடிப்பதில் அலட்சியம் வேண்டாம்! பாதுகாப்பே முதன்மையானது!

வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கும்பொழுது தலை, முகம், கைகளில் கடுமையான தீக்காயங்கள், விரல்கள் சிதைவடைதல், கண் பார்வை பாதிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக குழந்தைகளை எக்காரணம் கொண்டும் இதுபோன்ற பட்டாசுகளை பயன்படுத்த பெற்றோர்கள் அனுமதிக்ககூடாது.

அதிக வெடிப்புத் திறன் கொண்ட பட்டாசுகள், வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகள் மற்றும் ராக்கெட் உள்ளிட்ட ஆபத்தான பட்டாசுகளை ஒருபோதும் கையில் பிடித்து வெடிக்கக் கூடாது.

சந்தையில் கிடைக்கும் கையில் பிடித்து வானில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

பட்டாசுகளை எப்போதும் தரையில் வைத்து, பாதுகாப்பான தூரத்தில் நின்று மட்டுமே வெடிக்க வேண்டும்.

வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்கக் கூடாது.

குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் பொழுது பெற்றோர்கள் அல்லது பெரியோர்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடித்து மகிழுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பட்டாசு வெடிக்கும் இடத்தில் பாதுகாப்பு கருதி வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, விபத்துகள் இல்லாத மகிழ்ச்சியான பண்டிகையைக் கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)