# தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

> தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- **Published**: 2026-11-08
- **URL**: https://news.nammamap.in/press-release/22945-ministers-honor-veeramamunivar-birthday-chennai

---

08.11.2026 அன்று, தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு ஆகியோர் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள வீரமாமுனிவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். வீரமாமுனிவர், இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. இவர் கி.பி.1710-இல் இந்தியாவுக்கு வந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் சமயத் தொண்டு புரிந்தார். "தேம்பாவணி" போன்ற தமிழ் காப்பியங்கள், பல்வேறு இலக்கிய இலக்கண நூல்கள், அகராதிகள், குறிப்பாக "சதுரகராதி", "தொன்னூல் விளக்கம்" (குட்டித் தொல்காப்பியம்) ஆகியவற்றை இயற்றினார். இவர் திருக்குறளின் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்து, பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைத்த சிறப்பான முயற்சியை மேற்கொண்டார். பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். இவர் 1747-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே இயற்கை எய்தினார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)