# தமிழ்மணம் திட்டம்: அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

> தமிழ்நாடு அரசு, தமிழ்மணம் திட்டத்தின் கீழ் பல்வேறு அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ரூ.1,25,000 ஊதியத்துடன் பயண மற்றும் தங்குமிடச் செலவுகள் வழங்கப்படும்.
- **Published**: 2026-11-11
- **URL**: https://news.nammamap.in/press-release/22958-tamil-manam-scheme-teachers-foreign-countries

---

தமிழ்மணம் திட்டத்தின் கீழ் அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.

மாதம் ரூ.1,25,000 ஊதியமாக வழங்கப்படும்.

பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்டிற்கு ஒரு முறை சென்று திரும்புவதற்கான போக்குவரத்து, விசா மற்றும் தங்குமிடச் செலவினங்கள் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் 25 வயது நிரம்பிய, தகுதியும் திறமையும் வாய்ந்த, ஆங்கிலம் நன்கு எழுத, பேசத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் இயக்குநர், தமிழ் இணைய கல்விக்கழகம், சென்னை முகவரிக்கு 30.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)