# சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் 14.11.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

> சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் 14.11.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/மாற்றம் போன்ற சேவைகள் இம்முகாமில் வழங்கப்படும்.
- **Published**: 2026-11-11
- **URL**: https://news.nammamap.in/press-release/22962-chennai-public-distribution-system-grievance-camp

---

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் 14.11.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும்.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் இம்முகாமில் மேற்கொள்ளப்படும்.

நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்றும் வழங்கப்படும்.

பொது விநியோக நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இம்முகாமில் பெறப்பட்டு விரைந்து தீர்வு காணப்படும்.

இச்சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)