# கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு காலப் பட்டய வகுப்பு (2027)

> உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2027 சனவரித் திங்கள் முதல் தொடங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- **Published**: 2026-11-12
- **URL**: https://news.nammamap.in/press-release/22970-epigraphy-archaeology-diploma-course

---

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்துகொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் + சேர்க்கைக் கட்டணம் + அடையாள அட்டை + தேர்வுக் கட்டணம் என மொத்தம் ரூ.4000/- செலுத்த வேண்டும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 திசம்பர் 18-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிறுவன முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)