# மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த.சரத்குமார் அவர்கள் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 41 நபர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

> மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த.சரத்குமார் அவர்கள் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 41 நபர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
- **Published**: 2026-11-12
- **URL**: https://news.nammamap.in/press-release/22976-minister-distributes-appointment-orders-tnpsc

---

தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (தொகுதி -II) தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 41 நபர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி -IIA) தேர்வில் தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 14 நபர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன.

தொகுதி V-A தேர்வுகளின் மூலம் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 22 நபர்களுக்கும் மற்றும் உதவியாளர் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்ட 5 நபர்களுக்கும் துறை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன.

28.09.2025 அன்று நடைபெற்ற முதல்நிலைத் தேர்வின் மூலம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணிக்காக 14 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

21.12.2025 அன்று நடத்தப்பட்ட தொகுதி V-A தேர்வின் அடிப்படையில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் (22) மற்றும் உதவியாளர் (5) பணியிடங்களுக்கு 27 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)