# 9,646 கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் நவம்பர்-2026 முதல் ரூ.5,000/- உயர்த்தி வழங்கப்படும்.

> தமிழ்நாடு முதலமைச்சர், அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 9,646 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியத்தை 01.11.2026 முதல் ரூ.5,000/- உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
- **Published**: 2026-11-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22987-chief-minister-increases-guest-lecturers-pay

---

9,646 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் ரூ.5,000/- உயர்த்தப்படும்.

அரசு கலை, அறிவியல், கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.30,000/-லிருந்து ரூ.35,000/- ஆக உயர்த்தப்படும்.

அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.25,000/-லிருந்து ரூ.30,000/- ஆக உயர்த்தப்படும்.

இந்த உயர்வு 01.11.2026 முதல் அமலுக்கு வரும்.

இதனால் அரசுக்கு ரூ.24.12 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)