# தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணாக்கர்/ பொதுமக்களுக்கான ஆறு "தமிழ்நாடு நாள் - சிறப்புப் போட்டிகள்"

> தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் மாணாக்கர் மற்றும் பொதுமக்களுக்கான ஆறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மொழி மற்றும் அடையாளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
- **Published**: 2026-11-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22990-tamil-nadu-day-special-competitions

---

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் "தமிழ்நாடு நாள் - சிறப்புப் போட்டிகள்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான ஆறு போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டிகள்: 1. பேச்சுப் போட்டி, 2. ரீல்ஸ் போட்டி, 3. மீம்கள் உருவாக்கும் போட்டி, 4. புகைப்படப் போட்டி, 5. ஆவணப்படப் போட்டி, 6. சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் கீழ்க்கண்ட விரைவு துலங்கல் குறியீடு (QR code) வாயிலாகத் தங்களது படைப்புகளை 06-12-2026-க்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

போட்டிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு tamilnaduday2026@gmail.com என்ற மின்னஞ்சலை அணுகலாம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)