# பயிர்க் காப்பீட்டுத் திட்டம் - விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை - மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக இன்று 13-11-2026 சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

> விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளிக்கும் வகையில், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் இன்று 13.11.2026 காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. குத்தகை விவசாயிகள் பதிவு செய்வதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் FID, ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் கட்டாய நிபந்தனைகளில் தளர்வுகள் குறித்தும், சம்பா / தாளடி / பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி நாள் 01.12.2026 வரை நீட்டிக்கப்பட்டது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- **Published**: 2026-11-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22995-crop-insurance-farmers-welfare-tamil-nadu

---

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் விழிப்புணர்வுக் கூட்டம் இன்று 13.11.2026 காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

சம்பா / தாளடி / பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி நாள் 01.12.2026 வரை நீட்டிக்கப்பட்டது.

2026-2027ஆம் ஆண்டிற்கு மட்டும் FID மற்றும் ஆதார் அடிப்படையிலான OTP ஒப்புதல் பெறுதல் ஆகிய கட்டாய நிபந்தனைகளிலிருந்து தளர்வுகள் பெறப்பட்டுள்ளன.

மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் கொள்கை முடிவுகள் தொடர்பான விவசாயிகளின் கோரிக்கைகள் உரிய பரிசீலனைக்கு உடனுக்குடன் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றின் மீது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வேளாண்மை-உழவர்நலத்துறையால் உறுதியளிக்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)