# பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், நியாயமான விலையில் கிடைக்க இருப்பு வரம்பை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு:

> தமிழ்நாடு அரசு, அத்தியாவசியப் பொருட்களான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி / நெல் மற்றும் சர்க்கரை ஆகியவற்றுக்கு இருப்பு வரம்புகளை நிர்ணயித்து, நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- **Published**: 2026-11-14
- **URL**: https://news.nammamap.in/press-release/22998-tamil-nadu-government-sets-stock-limits-essential-commodities

---

அத்தியாவசியப் பொருட்களான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி / நெல் மற்றும் சர்க்கரை ஆகியவற்றுக்கு இருப்பு வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பு விவரங்களைத் தொடர்ந்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பிற்கான வரம்புகள் 13.11.2026 முதல் மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

அரிசி மற்றும் நெல்லுக்கான வரம்புகள் 31.01.2027 வரை நடைமுறையில் இருக்கும்.

ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் வரம்புக்கு மேல் வைத்திருக்கும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி / நெல் இருப்பை 16.11.2026 நாட்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

சர்க்கரையைப் பொறுத்தவரை, எந்தவொரு வணிகரும் சர்க்கரை இருப்பைப் பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மேல் அந்தச் சர்க்கரை இருப்பைத் தன்னிடம் வைத்திருக்கக் கூடாது.

பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புகார்களுக்கு கட்டணமில்லா உதவி எண்கள் 1967 / 1800 425 5901 வழங்கப்பட்டுள்ளன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)