# தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டு சிக்கனத்தை ஊக்குவித்திடவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மின்சாரச் செலவினங்களைக் குறைத்து உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ஐந்து பகுதிகளில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் (Energy Efficiency Facilitation Desks) அமைக்க நடவடிக்கை - மாண்புமிகு அமைச்சர் திரு. பெ.மதன் ராஜா அவர்கள் அறிவிப்பு

> மாண்புமிகு அமைச்சர் திரு. பெ.மதன் ராஜா அவர்கள், தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டு சிக்கனத்தை ஊக்குவித்திடவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மின்சாரச் செலவினங்களைக் குறைத்து உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ஐந்து பகுதிகளில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-11-17
- **URL**: https://news.nammamap.in/press-release/23013-minister-announces-energy-efficiency-desks-msmes

---

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக ஐந்து மாவட்ட தொழில் மையங்களில் எரிசக்தி செயல்திறன் உதவி மையங்கள் அமைக்கப்படும்.

இந்த மையங்கள் எரிசக்தி தணிக்கை, எரிசக்தி சிக்கன தொழில்நுட்பங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவது குறித்து வழிகாட்டும்.

MSME-களுக்கு உதவவும், தொடர்புடைய வல்லுநர்கள் மற்றும் திட்டங்களுடன் இணைக்கவும் ஆலோசனைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

எரிசக்தி சிக்கனம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள், பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும்.

முதற்கட்ட செயல்பாடுகளின் வெற்றியின் அடிப்படையில் இம்முயற்சி பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)