# இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

> மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
- **Published**: 2026-11-17
- **URL**: https://news.nammamap.in/press-release/23016-esi-hospitals-dispensaries-review-minister-labour-welfare

---

மருத்துவச் சேவைகளின் தரத்தையும், செயல்திறனையும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துதல், தேவைப்படும் இடங்களில் குளிர்சாதனப் பெட்டிகள் (Refrigerators) அமைத்தல் மற்றும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை முறையாகச் செயல்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)