# அண்ணன் சீர் திட்டம்

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு, 'அண்ணன் சீர்' திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-11-17
- **URL**: https://news.nammamap.in/press-release/23018-annan-seer-scheme-tamil-nadu

---

'அண்ணன் சீர்' திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.

'அண்ணன் சீர்' திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது தமிழ்நாடு அரசு இ-சேவை இணையதளமான https://www.tnesevai.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

திருமணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து, திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

5.10.2026 முதல் 15.1.2027 வரை நடைபெறும் திருமணங்களுக்கு 15.1.2027 வரை விண்ணப்பிக்கலாம்.

திருமணத்தின் போது மணமக்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட திருமண வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் (மணப்பெண்) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் வழங்கப்பட்ட குடும்ப அட்டையில் மணமகளின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு தனித்துவமான விண்ணப்ப எண் வழங்கப்படுவதுடன், விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி (SMS), வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும்.

திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)