# தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஒன்றிய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து விளையாட்டு மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு குறித்து ஆலோசனை

> தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, புதுதில்லியில் ஒன்றிய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, தமிழ்நாட்டில் விளையாட்டு மேம்பாடு, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு மற்றும் நிதி உதவி குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், 2036 ஒலிம்பிக் போட்டிகளில் படகுப் போட்டி மற்றும் அலைச்சறுக்குப் போட்டிகளை நடத்தவும், 2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் விருப்பம் தெரிவித்தார்.
- **Published**: 2026-11-18
- **URL**: https://news.nammamap.in/press-release/23027-sports-minister-meets-union-minister-sports-development-tamil-nadu

---

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஒன்றிய அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டில் விளையாட்டு மேம்பாடு, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு மற்றும் நிதி உதவி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

2036 ஒலிம்பிக் போட்டிகளில் படகுப் போட்டி மற்றும் அலைச்சறுக்குப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு வழங்கக் கோரப்பட்டது.

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

சென்னை அருகே உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (TNPESU) மேசைப்பந்து, இறகுப்பந்து, சைக்கிளிங் மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கும், திருச்சியில் உள்ள ஒலிம்பிக் அகாடமியில் குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ, டேக்வாண்டோ, வாள்வீச்சு மற்றும் வூஷு உள்ளிட்ட தற்காப்புக் கலை விளையாட்டுகளுக்கும் மையங்கள் அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சர்வதேசத்தரத்திலான உள்ளரங்க சைக்கிளிங் பந்தயப் பாதைகள், கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் ஒலிம்பிக் தரத்திலான அக்வாட்டிக் ஸ்போட்ஸ் வளாகங்கள், சென்னையில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு மையம், சர்வதேசத் தரத்திலான ஸ்போட்ஸ் க்ளைமிங் சென்டர், திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் சர்வதேசத் தரத்திலான வில்வித்தைப் பயிற்சி மையங்கள் மற்றும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் சர்வதேசத் தரத்திலான 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையங்கள் என 6 முக்கிய விளையாட்டு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி கோரி முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி, புதுக்கோட்டை, விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் சர்வதேசத் தரத்திலான 400 மீட்டர் செயற்கை ஓடுதளத்துடன் கூடிய தடகள மைதானங்கள் அமைப்பதற்கும், ஈரோடு, கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் சர்வதேசத் தரத்திலான பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கும் ஒன்றிய அரசின் நிதியுதவி வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)