# மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்டப் பயனாளிகள் நீக்கம் தொடர்பாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது

> மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 50% பயனாளிகள் நீக்கப்பட்டதாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என அரசு தெளிவுபடுத்துகிறது.
- **Published**: 2026-11-18
- **URL**: https://news.nammamap.in/press-release/23028-women-rights-scheme-beneficiaries-removal-false-news

---

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 50% பயனாளிகள் நீக்கப்பட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை.

இரண்டாம் கட்டப் பயனாளிகளைப் பெருமளவில் நீக்கும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

அரசாணைகளின்படி, பயனாளிகளின் விவரங்கள் பல்வேறு அரசுத் துறைகளின் தரவுத்தளங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது.

பயனாளிகள் இறந்தாலோ, தகுதியற்றவர்களாக மாறினாலோ அல்லது தாங்களாகவே விலக விருப்பம் தெரிவித்தாலோ மட்டுமே பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது.

தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- நிதியுதவி ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

நவம்பர் 2026 மாதத்திற்கான உரிமைத்தொகை 14.11.2026 அன்று 1,29,97,568 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)