# வேளாண்மை உழவர்நலத்துறை நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கை மற்றும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

> மாண்புமிகு வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில், 2026-2027ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கை தொடர்பான அறிவிப்புகள் மற்றும் பல்வேறு வேளாண்மை சார்ந்த நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- **Published**: 2026-11-19
- **URL**: https://news.nammamap.in/press-release/23039-agriculture-farmers-welfare-minister-review-schemes

---

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை திறம்பட செய்து முடித்திடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

வேளாண்மை உழவர் நலத்துறையின்கீழ் செயல்படுத்தப்படும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை விவசாயிகள் அறிந்து பயனடையும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

திட்டப்பயனாளிகளைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)