# விருதுநகர் மாவட்டத்தில் பாசனத்திற்காக நீர் திறந்துவிடும் ஆணை

> தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவுக்கல், பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து 3170.89 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதிக்காக நீர் திறந்துவிடப்படுகிறது.
- **Published**: 2026-11-20
- **URL**: https://news.nammamap.in/press-release/23044-virudhunagar-water-release-irrigation

---

பிளவுக்கல், பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து நீர் திறந்துவிடப்படும்.

பிளவுக்கல் திட்டத்தில் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு 23.11.2026 முதல் 4 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன அடி நீர் திறந்துவிடப்படும்.

பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்திற்கு 23.11.2026 முதல் 28.02.2027 வரை வினாடிக்கு 3 கன அடி நீர் திறந்துவிடப்படும்.

நீர்வரத்து மற்றும் நீரின் இருப்பு பொறுத்து அனைத்து கண்மாய்கள் பாசனத்திற்கும் தொடர்ந்து 28.02.2027 வரை நீர் திறந்துவிடப்படும்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தைச் சேர்ந்த 18 கிராமங்களிலுள்ள 3170.89 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)