# குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்

> 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- **Published**: 2026-11-20
- **URL**: https://news.nammamap.in/press-release/23045-child-welfare-committee-members-appointment-tiruvannamalai

---

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குக் குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை 22.12.2026 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)