# குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்

> 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- **Published**: 2026-11-20
- **URL**: https://news.nammamap.in/press-release/23046-children-welfare-committee-appointment

---

அரியலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு உறுப்பினர் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார், இது அரசு பணி அல்ல.

விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் வயது 35 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 22.12.2026 மாலை 5.00 மணி ஆகும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)