# பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

> மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் இன்று (23.11.2026) சென்னையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியினைத் தொடங்கி வைத்தார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 2000 கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, 38 மாவட்டங்களைச் சார்ந்த 152 ஆசிரியர்களுக்கு 23.11.2026 முதல் 27.11.2026 வரை 5 நாள்கள் உண்டு உறைவிடப் பயிற்சி நடைபெற உள்ளது.
- **Published**: 2026-11-23
- **URL**: https://news.nammamap.in/press-release/23056-graduate-teachers-skill-development-training

---

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியினைத் தொடங்கி வைத்தார்.

2000 பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, 38 மாவட்டங்களைச் சார்ந்த 152 கணித மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 நாள்கள் உண்டு உறைவிடப் பயிற்சி 23.11.2026 முதல் 27.11.2026 வரை நடைபெற உள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)