# கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.8.52 கோடி செலவில் கட்டப்பட்டு, ரூ.1.37 கோடி செலவில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள 148 புதிய வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்துவைத்து, முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கித் தொடங்கி வைத்தார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.9.89 கோடி செலவில் கட்டப்பட்ட 148 புதிய வீடுகளைத் திறந்து வைத்தார். மேலும், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை தொடங்கி வைத்தார், இது 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.14.95 கோடி கூடுதல் செலவில் பயனளிக்கும்.
- **Published**: 2026-11-26
- **URL**: https://news.nammamap.in/press-release/23069-cm-inaugurates-houses-allowance-sri-lankan-tamils-krishnagiri

---

கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.8.52 கோடி செலவில் கட்டப்பட்டு, ரூ.1.37 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்ட 148 புதிய வீடுகள் திறப்பு.

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடை தொடக்கம்.

குடும்பத் தலைவருக்கான மாதாந்திரப் பணக்கொடை ரூ.1,500-லிருந்து ரூ.1,800 ஆக உயர்வு.

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான மாதாந்திரப் பணக்கொடை ரூ.1,000-லிருந்து ரூ.1,200 ஆக உயர்வு.

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திரப் பணக்கொடை ரூ.500-லிருந்து ரூ.600 ஆக உயர்வு.

உயர்த்தப்பட்ட பணக்கொடையால் ஆண்டுக்கு ரூ.14.95 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும், மேலும் 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 பயனாளிகள் பயனடைவார்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)