அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru J Mohammed Parvez
Thiru J Mohammed Parvez தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
12 ஜூன், 2026PR #221
குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் உறுதி
உலக அளவில் அனுசரிக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் தொழிலாளர் துறையின் சார்பாக இன்று 12.06.2026 சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அனுசரிக்கப்பட்டது. மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, செனாய் நகர், அம்மா அரங்கத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என உறுதி அளித்தார்.