TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
கல்வி சேர்க்கை

தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது)

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்டங்கள்சென்னை
முக்கிய நபர்கள்M.G.R., Dr. J. Jayalalithaa

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குனர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும். இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர்.ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது. 2026-2027ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் 12.05.2026 காலை 10.00 மணி முதல் www.filminstitute.tn.gov.in எனும் இணையதளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை, பயனாளர் கையேட்டின் அறிவுறுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணத்தினை செலுத்தி பதிவு செய்தும், இரண்டாம் கட்டமாக அனைத்து உரிய ஆவணங்களையும் 02.06.2026 மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
  • 2
    இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு) படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • 3
    இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • 4
    இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • 5
    இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • 6
    இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • 7
    இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • 8
    மாணவர்கள் www.filminstitute.tn.gov.in எனும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Related Announcements & Press Releases