தொழில் மற்றும் முதலீடு
ரெனால்ட் குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் இன்று (18.5.2026) தலைமைச் செயலகத்தில், ரெனால்ட் குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்துப் பேசினார்கள்.
விரிவான சுருக்கம்
இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் ரெனால்ட் நிறுவனம் மேற்கொண்டுவரும் உற்பத்தி மற்றும் பொறியியல் செயல்பாடுகள், மாநிலத்தில் அந்நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் மோட்டார் வாகன உற்பத்தியில், ரெனால்ட் குழுமம் மேற்கொண்டுவரும் மதிப்புமிக்க கூட்டாண்மையைப் பாராட்டினார்கள். மேலும், நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என்பதைத் தெரிவித்து, மாநிலத்தில் ரெனால்ட் குழுமம் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்தார்.
முக்கிய அறிவிப்புகள்
- 1தமிழ்நாட்டில் ரெனால்ட் குழுமம் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஊக்குவித்தார்.
- 2நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என முதலமைச்சர் தெரிவித்தார்.