TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அரசு கலந்தாய்வுக் கூட்டம்

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் அதன் சார்ந்த முகமைகளின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், 26.5.2026 அன்று சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 3வது தளத்தில் உள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB), சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA), தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB), சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்துக் குழுமம் (CUMTA) மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (RCS) ஆகிய துறைகளின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. பிரபாகர், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் திரு.கிரண் குராலா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., முதன்மை செயல் அலுவலர் திரு.சந்திர சேகர் சாகமூரி, இ.ஆ.ப., வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் திருமதி.த.ரத்னா, இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்துக் குழுமம் (CUMTA) சிறப்பு அலுவலர் திரு.ஐ.ஜெயக்குமார், ஐ.ஆர்.டி.எஸ்.,(ஓய்வு) மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்