TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
சமூக நலன், தொழிலாளர், அரசு திட்டங்கள்

அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ், சென்னையில் உள்ள தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய அலுவலகத்தை ஆய்வு செய்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 100 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விரிவான சுருக்கம்

தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, மாவட்டந்தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கட்டுமானம், உடலுழைப்பு, வாகனம் ஓட்டுதல், மண்பாண்டம், முடிதிருத்துதல், ஓவியம், பாதையோர வணிகம், தையல், கைத்தறி நெசவு, விசைத்தறி, பட்டாசு மற்றும் தீப்பெட்டி, சலவை, காலணி, பனைமரம், உப்பளம் மற்றும் இணையம் சார்ந்த துரித பணி (Gig) உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்ட தொழிலாளர்கள் எவ்வித கட்டணமுமின்றி பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். இந்நாள் வரை (01.06.2026) 47,45,765 தொழிலாளர்கள் இவ்வாரியங்களில் பதிவு செய்துள்ளனர். கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, விபத்து ஊனம், விபத்து மரணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று (02.06.2026) சென்னை, இராயப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 100 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இவ்வாரியங்கள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு, அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நலத்திட்ட உதவிகள் முறையான பயனாளிகளுக்கு உடனுக்குடன் சென்றடைய ஏதுவாக மென்பொருளை மேம்படுத்தி, துரிதமாக செயல்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள். தொழிலாளர் ஆணையர் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் திரு. ஆ. திவ்வியநாதன், நிர்வாக அலுவலர் திருமதி. அ. ஜெயலட்சுமி, தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ், சென்னையில் உள்ள தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய அலுவலகத்தை ஆய்வு செய்தார்.
  • 2
    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 100 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
  • 3
    அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நல வாரியங்கள் அனைத்தையும் முறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
  • 4
    நலத்திட்ட உதவிகள் முறையான பயனாளிகளுக்கு உடனுக்குடன் சென்றடைய ஏதுவாக மென்பொருளை மேம்படுத்தி, துரிதமாக செயல்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் (முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில்).

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்