TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
சாலை விபத்து, நிதியுதவி, இரங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சிறுத்தனூர் கிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே நடந்த வாகன விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

விரிவான சுருக்கம்

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (11.06.2026) மாலை 04.45 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சிறுத்தனூர் கிராமம் அருகே ஐந்து மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த ஆம்னி வேன் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில், ஜெஸ்டின் (16) மற்றும் புருனோ (17) ஆகிய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆலன் (15), சுஜீத் (16) மற்றும் அஜய் (16) ஆகிய மூன்று மாணவர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்த மூன்று மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்
  • 2
    காயமடைந்த மூன்று மாணவர்களுக்கு சிறப்பு சிகிச்சை
  • 3
    உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி
  • 4
    காயமடைந்த மூன்று மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்