TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
கல்வி மற்றும் சேர்க்கை

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது)

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) மற்றும் இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு.

மாவட்டங்கள்சென்னை
முக்கிய நபர்கள்M.G.R., Dr. J. Jayalalithaa

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் தனித்துவம் மிக்க கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குனர்களையும் உருவாக்கி வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர்.ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது. 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆறு பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் 12.05.2026 முதல் 21.06.2026 மாலை 5.00 மணி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக, இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) மற்றும் இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பக் காலக்கெடு 27.06.2026 மாலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் இம்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) மற்றும் இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு 27.06.2026 மாலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Announcements & Press Releases