TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
முதலீடு

850 கோடி ரூபாய் முதலீட்டில் 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கரூர் மாவட்டத்தில் அடிடாஸ் நிறுவனத்திற்காக, தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026), கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026), கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கோத்தாரி குழுமம் மற்றும் உலகின் முன்னணி தைவான் காலணி உற்பத்தியாளரான எவர்வான் குழுமம் ஆகியவற்றின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி தொழிற்திட்டங்களை நிறுவியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனத்திற்கான தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்திடும் வகையில், 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இத்திட்டத்திற்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார். இதன்மூலம், உலகளாவிய காலணி உற்பத்தித் துறையில், தமிழ்நாட்டின் நிலை மேலும் வலுப்படுவது மட்டுமின்றி, இம்மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மற்றும் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக மகளிருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இத்திட்டம் அமைந்திடும்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    கரூர் மாவட்டத்தில் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
  • 2
    ஆலைக்கான முதலீடு 850 கோடி ரூபாய்.
  • 3
    6,750 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம், குறிப்பாக பெண்களுக்கு.
  • 4
    உலகளாவிய காலணி உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டின் நிலை வலுப்படுத்தப்படும்.
  • 5
    கரூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்