குறிச்சொல் செய்திகள்
#Common Technology Facility
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Common Technology Facility குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 ஜூன், 2026PR #244
தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் IN-SPACe நிறுவனத்திற்கிடையே மேற்கொள்ளப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) இடையே தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் உருவாக்கப்படவுள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் "விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் (CTF)" அமைப்பதற்காக கையெழுத்திடப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்தைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.