TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Cooperative Week

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Cooperative Week குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

29 ஜூன், 2026

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள "கூட்டுறவு வாரம்-2026"-ஐ மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (29.06.2026) கூட்டுறவு கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (29.06.2026) சென்னை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் "கூட்டுறவு வாரம்-2026"-ஐ கூட்டுறவு கொடி ஏற்றி துவக்கி வைத்தார். இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, வருகின்ற 29.06.2026 முதல் 06.07.2026 வரை மாநிலம் முழுவதும் "கூட்டுறவு வாரம்" மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது.