மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தொழில்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா தலைமையில் தொழில்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
விரிவான சுருக்கம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக தொழில் துறை கூட்ட அரங்கில் இன்று (18.05.2026) மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச.விஜயகுமார் இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, சரக்கு போக்குவரத்து, விண்வெளி, சிறப்பு தொழிற் பூங்காக்கள், அறிவுசார் மற்றும் புத்தாக்கம், நகர எரிவாயு விநியோகம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும், சிப்காட் நிறுவனத்தின் தொழில் பூங்காக்களை உருவாக்குவதற்கான நில எடுப்புப் பணிகள், அடிப்படை வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளின்படி, புதிய தொழில் திட்டங்கள் செயல்படுவதற்குரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையினை தயாரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் டிட்கோ நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைவர் திருமதி சந்தியா வேணுகோபால் சர்மா, இ.ஆ.ப., டிட்கோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மரு. அலர்மேல்மங்கை இ.ஆ.ப., டிட்கோ நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., மற்றும் டிட்கோ, சிப்காட் நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் செயல்படுத்தப்படும் மற்றும் திட்டமிடப்பட்ட திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
- 2முதலமைச்சர் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளின்படி புதிய தொழில் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
- 3விருதுநகர் மாவட்டத்தில் உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையினை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது.