TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS-140 VLTD பொருத்தும் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS–140 VLTD பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாரி உரிமையாளர் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாக இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

இக்கூட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் தனியார் பயணிகள் வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு AIS-140 VLTD எனும் GPS வசதியுடன் கூடிய கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதில், வாகன உரிமையாளர்கள் பயனடையும் வகையில் VLTD சாதனங்களின் விலையை சீராகவும் மற்றும் நியாயமாகவும் நிர்ணயம் செய்திட உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களின் பிரிதிநிதிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார். மேலும், VLTD தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், VLTD சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு மற்றும் AIS–140 திட்டத்தின் செயலாக்க நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் AIS–140 VLTD சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்க முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள், C-DAC தொழில்நுட்பக் குழுவினர், AIS-140 VLTD உற்பத்தியாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    AIS-140 VLTD சாதனங்களின் விலையை சீராகவும் மற்றும் நியாயமாகவும் நிர்ணயம் செய்ய உற்பத்தி நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
  • 2
    VLTD தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
  • 3
    VLTD சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு மற்றும் AIS–140 திட்டத்தின் செயலாக்க நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்