TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தகராறுசட்ட விவகாரங்கள்அரசு கூட்டம்நீர்வள ஆதாரங்கள்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசால் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் தலைமையில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும் தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

விரிவான சுருக்கம்

கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (25.05.2026) காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேகதாது அணை உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், 30.11.2018 மற்றும் 7.6.2022 தேதிகளில் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 13.11.2025 அன்று உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கவில்லை என்றும், இத்திட்டம் தொடக்கநிலையில் தான் உள்ளது என்றும், இது மத்திய நீர்வளக் குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்து வழக்குகளை முடித்து வைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசால் 11.12.2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு, உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கண்ட விவரங்களைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் சாய் குமார், இ.ஆ.ப., அரசு தலைமை வழக்கறிஞர் திரு. விஜய் நாராயண், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., சட்டத்துறை செயலாளர் திரு.எஸ். ஜார்ஜ் அலெக்சாண்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர் திரு. ஜி. உமாபதி, காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவின் தலைவர் திரு. ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மாண்புமிகு முதலமைச்சர் தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
  • 2
    உச்சநீதிமன்றம் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கவில்லை என்றும், இத்திட்டம் தொடக்கநிலையில் தான் உள்ளது என்றும் தெரிவித்தது.
  • 3
    தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Announcements & Press Releases