TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகம்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர். வே.க. ராஜீவ் அவர்கள் தலைமையில் 25.05.2026 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கிண்டி தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய பிரச்சனைகள், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விரிவான சுருக்கம்

25.05.2026 அன்று மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர். வே.க. ராஜீவ் அவர்கள் தலைமையிலும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹு, இ.ஆ.ப அவர்கள் முன்னிலையிலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கிண்டியில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டிலுள்ள சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை பெறாமல் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மீது உடனடி மூடுதல் நடவடிக்கை எடுக்கவும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் தொழிற்கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து அலுவலர்களும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளவும், அவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், சிறப்பு செயலாளர் / சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, திரு. அனுராக் மிஸ்ரா, இ.வ.ப., உறுப்பினர் செயலர் / தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திரு.எம்.சரவணகுமார் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை பெறாமல் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மீது உடனடி மூடுதல் நடவடிக்கை
  • 2
    கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் தொழிற்கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள்
  • 3
    ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல்
  • 4
    ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
  • 5
    ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகள்

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்