TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
சிறுபான்மையினர் நலன்; அரசு ஆய்வு

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ.எம்.ஷாஜஹான் அவர்களின் தலைமையில் இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ.எம்.ஷாஜஹான் அவர்களின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றின் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறுபான்மையினர் நலன் தொடர்பான அனைத்து திட்டங்களையும் உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு அதன் பயன்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், உதவித் தொகைகள், கடன் வசதி, புனித பயணங்களுக்கான விண்ணப்பங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் புனரமைப்பு, அடக்கஸ்தலங்களுக்கான இடம் தேர்வு செய்தல் மற்றும் பிற முக்கிய இனங்கள் தொடர்பான கோரிக்கைகள் மீது தனிக் கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காணவும் அறிவுறுத்தினார்கள். அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும், அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் துறையின் அனைத்து திட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஒரு கோடிக்கு மேல் உள்ள மதம் மற்றும் மொழி வாரியான சிறுபான்மையின மக்களின் நலனுக்காக செயல்படும் இத்துறையின் அலுவலர்கள், மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு நலத்திட்டங்களை செவ்வனே செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவ்வாய்வு கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் செயலாளர் திரு. வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., சிறுபான்மையினர் நல ஆணையர் திருமதி. மு.ஆசியா மரியம், இ.ஆ.ப., மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    அனைத்து சிறுபான்மையினர் நலத் திட்டங்களையும் உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்.
  • 2
    திட்டங்களின் பயன்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
  • 3
    உதவித் தொகைகள், கடன் வசதி, புனித பயணங்களுக்கான விண்ணப்பங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் புனரமைப்பு, அடக்கஸ்தலங்களுக்கான இடம் தேர்வு செய்தல் தொடர்பான கோரிக்கைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.
  • 4
    அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
  • 5
    அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் துறையின் அனைத்து திட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
  • 6
    சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை அலுவலர்கள் மிகுந்த முனைப்புடன் செவ்வனே செயல்படுத்த வேண்டும்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்