தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
TNeGA மின்-ஆளுமை சேவைகள், இணைய சேவைகள், ஸ்டார்ட்அப் முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு.
மூன்று நாட்கள் “மசாலா மற்றும் இனிப்பு (ரெடி மிக்ஸ்) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பயிற்சித் திட்டம்
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) ஆனது செப்டம்பர் 16-18, 2026 வரை அதன் சென்னை வளாகத்தில் “மசாலா மற்றும் இனிப்பு (ரெடி மிக்ஸ்) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்” குறித்த மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் (Tamil Nadu Olympic City) அமைப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் (Tamil Nadu Olympic City) அமைக்கப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவுத் திறன் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் ICT அகாடமி, பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் (CSR) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது
மத்திய, மாநில அரசு மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியான ICT அகாடமி, தமிழ்நாட்டில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் (CSR) அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதன் மூலம் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய மையமாக மாறும்.
விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 23.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, இந்து சமய அறநிலையத்துறைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
ஐந்து நாட்கள் "தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி".
சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), ஆகஸ்ட் 17 முதல் 21, 2026 வரை ஐந்து நாட்கள் "தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி" திட்டத்தை அதன் சென்னை வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
முதலமைச்சர் கோப்பை - 2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆகஸ்ட்- 6 முதல் இணையத்தளத்தில் பதிவு செய்ய அழைப்பு
முதலமைச்சர் கோப்பை - 2026 விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆன்லைன் பதிவு ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 31, 2026 வரை tncmtrophy.sdat.in இணையதளத்தில் நடைபெறும். போட்டிகள் செப்டம்பர் 4, 2026 முதல் மாவட்ட அளவில் தொடங்கும். இந்த ஆண்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
மூன்று நாட்கள் "செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்" பயிற்சித் திட்டம்
சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), ஆகஸ்ட் 4 முதல் 6, 2026 வரை மூன்று நாட்கள் "செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்" பயிற்சித் திட்டத்தை EDII, சென்னையில் நடத்துகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணை, 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணை மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.14.13 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ்அர்ஜுனா அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையினையும், 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், கோயம்பேட்டில் இயங்கிவரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை (TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.07.2026) சென்னை, கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் (Tertiary Treatment Reverse Osmosis - TTRO) சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம் (Public Grievance Portal) - தணிக்கைத் துறை தொடர்பான மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்வு செய்யும் புதிய தளம் உருவாக்கப்பட்டது – தொடர்பாக
தணிக்கைத் துறை தொடர்பான பொதுமக்கள் மற்றும் தணிக்கை மேற்கொள்ளப்படும் நிறுவனங்களின் குறைகளை எளிதாக தீர்க்கவும், தேவையான விவரங்களை உடனுக்குடன் பெறவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், வசதிகளை அதிகரிக்கவும் CAMS வலைதளத்தின் ஒரு பகுதியாக புதிய பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்: செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி மேம்பாடு' குறித்த மூன்று நாள் பயிற்சித் திட்டம்
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சென்னை வளாகத்தில் ஜூலை 15 முதல் 17, 2026 வரை மூன்று நாள் 'செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி மேம்பாடு' பயிற்சித் திட்டத்தை நடத்துகிறது. இது குறியீடற்ற/குறைந்த குறியீட்டு கருவிகளைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்மாதிரிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.
5 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் 'திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி'
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி 20.07.2026 முதல் 24.07.2026 வரை நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட, 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.