TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அரசு நிர்வாகம்; ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமதி சி.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் பால்வளத்துறையின் ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமதி சி.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் இன்று 27.05.2026 தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறையின் நிர்வாகப் பிரிவு, நிதி பிரிவு, விற்பனைப் பிரிவு, திட்டமிடுதல் பிரிவு, கொள்முதல் பிரிவு, பொறியியல் பிரிவு, தர உறுதி பிரிவு, அம்பத்தூர் சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் பால் பண்ணை உள்ளிட்ட இதர பிரிவுகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள், மாநிலத்தின் பால் உற்பத்தி, பால் கொள்முதல், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் செயல்பாடுகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் செயல்பாடுகள், பால் கூட்டுறவு நிறுவனங்களின் உள்கட்டமைப்பு செயல்பாடுகள், பணியாளர்களுக்கு செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கான நலத்திட்டங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை, கால்நடை பராமரிப்பிற்கான தரமான தீவனங்கள், தூய பால் உற்பத்தி மற்றும் பால்வளத்துறையின் தற்போது நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், எந்தெந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார். மேலும் பால் உற்பத்தியாளர்களின் நலன் சார்ந்த பணிகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகத்தினை செயல்படுத்திட அனைத்து அலுவலர்களையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    பால்வளத்துறையில் கூடுதல் கவனம் தேவைப்படும் பகுதிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது
  • 2
    பால் உற்பத்தியாளர்களின் நலன் சார்ந்த பணிகள் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது

Related Announcements & Press Releases