TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அரசு செயல்பாடுகள் / வளர்ச்சித் திட்டங்கள்

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் சென்னை, கடற்கரை சாலையில் ரூபாய் 8.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் திரு.ராஜ்மோகன் சென்னை கடற்கரை சாலையில் ரூபாய் 8.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கடலூர் மாவட்டத்தில் மாணவிகளுடன் கலந்துரையாடி வாழ்த்துகள் தெரிவித்தார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் இன்று (27.05.2026) சென்னை, கடற்கரை சாலையில் ரூபாய் 8.93 கோடி மதிப்பீட்டில் 19741 சதுரடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு கட்டுமனப் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுப்பணித்துறை அலுவலர்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி என்.எஸ்.இசை 1330 திருக்குறள் ஒப்புவித்து அதற்கான பொருளையும் விளக்கிக் கூறினார். தொடர்ந்து, அதே பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவி எஸ்.காவ்யா 195 நாடுகளின் தேசியக் கொடியினை பார்த்து அதன் நாட்டின் பெயரை சரியாகக் கூறினார். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தனித்திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கூறி அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • 2
    கட்டுமானப் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
  • 3
    அமைச்சர் கடலூர் மாவட்டத்தில் மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தனித்திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கூறி வாழ்த்துகள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

Related Announcements & Press Releases