மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் சென்னை, நந்தனத்தில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் (டான்செம்) மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிமெண்ட் விற்பனையை அதிகரிப்பது மற்றும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன அலுவலக கூட்ட அரங்கில் இன்று (27.05.2026) மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலளர் முனைவர் ச.விஜயகுமார் இ,ஆ,ப அவர்கள் முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது. கூட்டத்தின் போது, அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் டான்செம் நிறுவனமானது திறந்த சந்தையிலும், அரசுத் துறைகளுக்கும் சிமெண்ட் விற்பனையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், அரசுத் துறைகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்த விவரங்களைச் சேகரித்து, சிமெண்ட் தேவையினை அறிந்து அதற்கு ஏற்றார் போல் சந்தைப்படுத்துதல் முறையைப் பின்பற்றவும் அறிவுறுத்தினார். மேலும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் அலுவலர்களுக்கு தமிழ்நாட்டில் மேம்பட்ட உற்பத்தித் துறை வளர்ச்சி, தொழில் துறை உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதிய முதலீடுகளை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழ்நாட்டை முன்னணி தொழில் மற்றும் உற்பத்தி மாநிலமாக வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சிறப்புச் செயலாளர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. அஜய் யாதவ் இ.ஆ.ப., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மரு. அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1டான்செம் நிறுவனமானது திறந்த சந்தையிலும், அரசுத் துறைகளுக்கும் சிமெண்ட் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 2அரசுத் துறைகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்த விவரங்களைச் சேகரித்து, சிமெண்ட் தேவையினை அறிந்து கொள்ள வேண்டும்.
- 3தேவைக்கேற்ப சந்தைப்படுத்துதல் முறையை பின்பற்ற வேண்டும்.
- 4தமிழ்நாட்டில் மேம்பட்ட உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- 5தொழில் துறை உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- 6புதிய முதலீடுகளை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- 7தமிழ்நாட்டை முன்னணி தொழில் மற்றும் உற்பத்தி மாநிலமாக வலுப்படுத்த வேண்டும்.