TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
பேரிடர் நிவாரணம் மற்றும் இழப்பீடு

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இடிமின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.4 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலை வழங்கினார்

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், இடிமின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.4 இலட்சம் காசோலைகளை வழங்கினார்.

மாவட்டங்கள்மதுரை
முக்கிய நபர்கள்C.T.R. Nirmal Kumar, Ramuthai

விரிவான சுருக்கம்

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று (27.05.2026) மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எழுமலை உள்வட்டம், சூலப்புரம் கிராமத்தில் 26.05.2026 அன்று மாலை 4.00 மணியளவில் இடிமின்னல் தாக்கி உயிரிழந்த திருமதி.ராமுதாய் (வயது-60), திருமதி.தனிக்கொடி(வயது-58), திருமதி.கணபதி (வயது-62) ஆகியோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.4 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், இடிமின்னல் தாக்கி காயமடைந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி.வாசியம்மாள் (வயது-56) என்பவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு. கொ. வீர ராகவ ராவ் இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார் இ.ஆ.ப., சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி.கருப்பையா, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.விஜய், உசிலம்பட்டி சார் ஆட்சியர் திரு.உட்கர்ஷ் குமார் இ.ஆ.ப., அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் திரு.அருள் சுந்தரேஸ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    இடிமின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.4 இலட்சம் காசோலை வழங்கப்பட்டது.
  • 2
    இடிமின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
  • 3
    காயமடைந்த திருமதி.வாசியம்மாள் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்