TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாடு

கோயம்புத்தூர், நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய புதிய திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு

மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய திட்டப்பணிகள் குறித்து 31.05.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் 31.05.2026 அன்று கோயம்புத்தூர் மாவட்ட நேரு விளையாட்டரங்கில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் இந்த அரங்கம் மாவட்டத்தின் மையப்பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதுடன், 32,000 பார்வையாளர்களை ஒரே நேரத்தில் அமரவைக்கும் வசதி கொண்டது. குறிப்பாக செயற்கையிழை ஓடுதளபாதை, கால்பந்து மைதானம், ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கம் மற்றும் குளிர் சாதன வசதி கொண்ட உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகள் இங்கு பயன்பாட்டில் உள்ளன. இங்கு அமையப்பெற்றுள்ள விளையாட்டு விடுதியில் புதிதாக வாள்வீச்சு பிரிவில் 5 மாணவர்களும், ரோடு பைக்பயிற்சி 5 மாணவர்களுக்கும் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் இங்குள்ள விளையாட்டு விடுதியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 60 லிருந்து 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நேரு விளையாட்டரங்கில் பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களின் வசதிக்காக, கூடைப்பந்து செமி இண்டோர் அரங்கிற்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் ரூ.7.95 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய விளையாட்டு விடுதி கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த நவீன விடுதியில் விளையாட்டு வீரர்களுக்கான படிப்பு அறை, உடற் பயிற்சிக்கூடம், பொழுதுபோக்கு அறை மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளை தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்திட வேண்டும் என அமைச்சர் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அவர் யோகாசனம், பிரணாயாமம், மூச்சுப்பயிற்சி, ஆசனா, தியானம், கைப்பந்து, தடகளம், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், கபாடி, கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் குறித்து கேட்டு அறிந்ததுடன், விளையாட்டு வீரர்கள் பல்வேறு வெற்றிகளைப் பெற்று சாதனையாளர்களாக திகழ தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் திரு. சஜ்ஜன்சிங் ரா சாவன் இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ரெ.சுமன், பொது மேலாளர் திருமதி.எல்.சுஜாதா, செயற்பொறியாளர் திரு.புஷ்பலிங்கம், விளையாட்டுத் துறை மண்டல முதுநிலை மேலாளர் திரு.அருணா, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் திருமதி. புவனேஸ்வரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • 2
    விளையாட்டு விடுதியில் புதிய வாள்வீச்சு பிரிவு மற்றும் ரோடு பைக்பயிற்சி தொடங்கப்பட்டு, மாணவர் எண்ணிக்கை 60லிருந்து 75 ஆக உயர்த்தப்படும்.
  • 3
    ரூ.7.95 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன விளையாட்டு விடுதி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
  • 4
    நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்திட அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Announcements & Press Releases