தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) சென்னை
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2026-2027ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.
விரிவான சுருக்கம்
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் துறையில் வல்லுநர்களை உருவாக்கும் தனித்துவமிக்க கல்வி நிறுவனமாகும். 2016-2017 கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர்.ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. 2026-2027 கல்வி ஆண்டிற்கான இளங்கலை காட்சிக்கலை படிப்புகளின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.filminstitute.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 12.05.2026 முதல் 02.06.2026 மாலை 5.00 மணி வரை பெறப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. நிர்வாகக் காரணங்களுக்காக, விண்ணப்பக் கால அவகாசம் 14.06.2026 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் போன்ற பிரிவுகளில் இளங்கலை காட்சிக்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. கலை ஆர்வம் உள்ள மாணவர்கள் இப்பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய அறிவிப்புகள்
- 1தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2026-2027 கல்வி ஆண்டு இளங்கலை காட்சிக்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 2விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான புதிய கடைசி தேதி 14.06.2026 மாலை 5.00 மணி ஆகும்.
- 3கீழ்க்கண்ட இளங்கலை காட்சிக்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன: ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்.