TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
சுற்றுச்சூழல் பாதுகாப்புகாலநிலை மாற்றம்நகர்ப்புற வெப்பத் தணிப்புஆற்றல் திறன்நிலையான வளர்ச்சி

இந்தியாவின் முதல் மாநில அளவிலான குளிர் கூரை பூச்சு (Cool Roof Coating) பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது

உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு, தமிழ்நாடு அரசு குளிர் கூரை பூச்சு பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (Standard Operating Procedure SOP) வெளியிட்டுள்ளது. இது முறையான மற்றும் தர உறுதியுடன் கூடிய குளிர் கூரை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் மாநில அளவிலான தொழில்நுட்ப கட்டமைப்பாகும்.

விரிவான சுருக்கம்

உலக சுற்றுச்சூழல் தினம் 2026 முன்னிட்டு, தமிழ்நாடு அரசு குளிர் கூரை பூச்சு பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (Standard Operating Procedure SOP) வெளியிட்டுள்ளது. இது முறையான மற்றும் தர உறுதியுடன் கூடிய குளிர் கூரை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் மாநில அளவிலான தொழில்நுட்ப கட்டமைப்பாகும். இந்த நிலையான செயல்முறை வழிகாட்டியை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் வி. ராஜீவ் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு ஆர்.வி. ரஞ்சித்குமார் ஆகியோர் வெளியிட்டனர். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) ஆகியவை, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் சீட்ஸ் தொழில்நுட்ப சேவைகள் (STS) ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆவணத்தை உருவாக்கியதன் மூலம் மாநிலத்தின் காலநிலை நடவடிக்கையில் ஒரு முக்கிய இடத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், வீடுகள், பள்ளிகள் மற்றும் பொது கட்டடங்களுக்கு பொருந்தும் வகையில், கூரை மதிப்பீடு, பூச்சு பயன்பாடு, தரக் கட்டுப்பாடு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கான தரநிலைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை இந்த வழிகாட்டி, காலநிலை இலக்குகளை செயல்படுத்தக்கூடிய நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றுகிறது. அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட இயற்கை குளிர்வூட்டும் (Passive Cooling) குளிர் கூரை முறையை செயல்படுத்துவதன் மூலம் கூரை மேற்பரப்பு வெப்பநிலையை 6-8°C வரையிலும் மற்றும் உட்புற வெப்பநிலையை 4-5°C வரையிலும் குறைக்க முடியும். இதனால் கடுமையான வெப்ப காலங்களில் கட்டடங்களின் உள்சூழல் வசதி மேம்படும். மேலும், Solar Reflective Index (SRI) 102 கொண்ட அதிக சூரிய ஒளி பிரதிபலிப்பு திறன் உடைய பூச்சுகளை பயன்படுத்துவதன் மூலம் குளிர்விப்பு மின்சாரத் தேவையை 20 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும், வெப்ப இடர்பாடு நேரங்களை 30 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும் இவ்வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இயந்திர குளிர்விப்பு அமைப்புகளை அதிகமாக சாராமல், குறைந்த செலவில் மற்றும் ஆற்றல் திறன் மிக்க தீர்வை பெற முடியும். சாத்தியக்கூறு ஆய்வு, கொள்முதல், மேற்பரப்பு தயாரிப்பு, பூச்சு பயன்பாடு, தர உறுதி, பாதுகாப்பு நெறிமுறைகள், பராமரிப்பு தேவைகள், கடமை மற்றும் பொறுப்புகளை தெளிவாக வரையறுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய 12 கட்ட செயலாக்க கட்டமைப்பை இந்த வழிகாட்டி வழங்குவதுடன், இத்திட்டம் பயனுள்ளதாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்கிறது. தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஆகியவை இணைந்து உருவாக்கப்பட்ட இந்த நிலையான செயல்முறை வழிகாட்டி, பெரிய அளவிலான குளிர் கூரை திட்டங்களுக்கு செயலாக்க வழிகாட்டியாக அமைகிறது. மேலும், இது காலநிலை மாற்றத்துக்கு எதிரான தாங்கும் திறனை அதிகரிக்கவும், உமிழ்வுகளை குறைக்கவும், பொதுமக்களின் நலனை மேம்படுத்தவும், பிற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய ஆதாரபூர்வமான மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    இந்தியாவின் முதல் மாநில அளவிலான குளிர் கூரை பூச்சு பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை (SOP) தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது.
  • 2
    குளிர் கூரை முறையால் கூரை மேற்பரப்பு வெப்பநிலையை 6-8°C வரையிலும் மற்றும் உட்புற வெப்பநிலையை 4-5°C வரையிலும் குறைக்க முடியும்.
  • 3
    Solar Reflective Index (SRI) 102 கொண்ட குளிர் கூரை பூச்சுகளைப் பயன்படுத்துவதன் மூலம் குளிர்விப்பு மின்சாரத் தேவையை 20 சதவீதம் வரையிலும் வெப்ப இடர்பாடு நேரங்களை 30 சதவீதம் வரையிலும் குறைக்க முடியும்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்