TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அரசு கூட்டம்; நகர்ப்புற திட்டமிடல்; வளர்ச்சி; நியமனங்கள்

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூன்று உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், நகர் ஊரமைப்பு திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வரன்முறைப்படுத்துதல் குறித்த பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி 10.06.2026 அன்று சென்னை, கோயம்பேடு, சிஎம்டிஏ கட்டடத்தில் உள்ள நகர் ஊரமைப்பு ஆணையரகம் அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப.ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கு நகர் ஊரமைப்பு துறையில் உதவி இயக்குநர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகர் ஊரமைப்பு ஆணையரகத்தின் நிர்வாக அமைப்பு, துறை கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள், மண்டலத் திட்டங்கள், முழுமைத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கிய கூறுகள், புவிசார் தகவல் அமைப்பு அடிப்படையிலான முழுமைத் திட்டம், திட்டக் குழுமங்களின் அமைப்பு மற்றும் உறுப்பினர் நியமனங்கள், உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதிகள், ஒற்றைச் சாளர இணையதள வசதி, சுய சான்றிதழ் திட்டத்தின் முன்னேற்றம், மலையிடப் பாதுகாப்பு குழுமம், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள்/ மனைகளை வரன்முறைப்படுத்துதல், அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்கள் வரன்முறைப்படுத்துதல் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.இரா.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., நகர் ஊரமைப்பு ஆணையர் திரு.கிரண் குராலா, இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் திரு.ப.ரங்கநாதன், இணை இயக்குநர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
  • 2
    நகர் ஊரமைப்புத் துறையில் மூன்று உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
  • 3
    நிர்வாக அமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள், முழுமைத் திட்டங்கள், புவிசார் தகவல் அமைப்பு, உட்கட்டமைப்பு நிதி, ஒற்றைச் சாளர வசதி, சுய சான்றிதழ் திட்டம், மலையிடப் பாதுகாப்பு மற்றும் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள்/கட்டிடங்கள் வரன்முறைப்படுத்துதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

Related Announcements & Press Releases