TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
குடிமைப் பணிப் பயிற்சி

அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி

அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 225 ஆர்வலர்களுக்கு முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ரூ.9,000/- ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் சேர்க்கை குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விரிவான சுருக்கம்

அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 225 ஆர்வலர்களுக்கு ஜுன் 2026 முதல் ஆகஸ்டு 2026 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமின்றி, குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த இதர ஆர்வலர்களும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் சேர்த்து ஊக்கத் தொகையாக ரூ.9,000/- வழங்கப்படும். இப்பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள் 17.06.2026 காலை 6.00 மணி முதல் 18.06.2026 மாலை 6.00 வரை www.civilservicecoaching.com இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட ஆர்வலர்களின் விவரம் 18.06.2026 இரவு 9.00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். 20.06.2026 மற்றும் 21.06.2026 ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு, 22.06.2026 முதல் முதன்மைத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். விண்ணப்பப் பதிவு/சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விரிவான விவரங்கள் பயிற்சி மையத்தின் இணையதளத்தில் (www.civilservicecoaching.com) வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு 044-24621475 என்ற தொலைபேசி எண், 9345766957 என்ற புலன எண் (Whatsapp) மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 225 ஆர்வலர்களுக்கு மூன்று மாத முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்படும்.
  • 2
    பயிற்சிக் காலத்தில் ரூ.9,000/- ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • 3
    பயிற்சியில் சேர 17.06.2026 காலை 6.00 மணி முதல் 18.06.2026 மாலை 6.00 மணி வரை www.civilservicecoaching.com இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
  • 4
    தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் 18.06.2026 இரவு 9.00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • 5
    சேர்க்கை 20.06.2026 மற்றும் 21.06.2026 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
  • 6
    பயிற்சி வகுப்புகள் 22.06.2026 முதல் தொடங்கும்.

Related Announcements & Press Releases