மாண்புமிகு ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட விலை ஆதரவுத் திட்டத்தில் பச்சைப் பயறு மற்றும் கொப்பரை கொள்முதல் தொடர்பான காணொலிக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. வினோத் அவர்கள் கலந்து கொண்டார்
ஒன்றிய வேளாண்மை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விலை ஆதரவுத் திட்டம் குறித்த காணொலிக் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை அமைச்சர் திரு.வினோத் அவர்கள் கலந்துகொண்டார், மேலும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கைகளை விடுத்தார்.
விரிவான சுருக்கம்
இன்று (18–06–2026) மாண்புமிகு ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.சிவராஜ்சிங் சௌகான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விலை ஆதரவுத் திட்டம் தொடர்பான காணொலிக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.வினோத் அவர்கள் கலந்துகொண்டார். இதில் பயறு வகைகள் மற்றும் கொப்பரை ஆகியவற்றிற்காக செயல்படுத்தப்படும் விலை ஆதரவுத் திட்டத்தில் பச்சைப் பயறு மற்றும் கொப்பரை கொள்முதலுக்கு தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டுள்ள கருத்துருவினைப் பரிசீலனை செய்து கொப்பரை கொள்முதலுக்கான அனுமதியினை உடனடியாக வழங்குமாறும், பச்சைப் பயறு கொள்முதல் அளவினை உயர்த்தி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் திரு.பொ.சங்கர் இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்.
முக்கிய அறிவிப்புகள்
- 1விலை ஆதரவுத் திட்டம் தொடர்பான காணொலிக் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் கலந்துகொண்டார்.
- 2கொப்பரை கொள்முதலுக்கான தமிழ்நாடு அரசின் கருத்துருவிற்கு உடனடியாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- 3பச்சைப் பயறு கொள்முதல் அளவினை உயர்த்தி வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.