#Agriculture
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Agriculture குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வேளாண்மை-உழவர் நலத் துறைக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 69 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கி, தேசிய அளவில் விருதுகள் பெற்ற நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 69 உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், தேசிய விருதுகள் பெற்ற நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை விவசாயிகளுக்காக 10 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் / நிறுவனங்கள் அமைக்க உள்ளது
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகம் 2026-27ஆம் ஆண்டிற்கான பத்து மாவட்டங்களில் பழங்குடியின விவசாயிகளுக்காக 10 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் / நிறுவனங்கள் (FPO / FPC) உருவாக்க திட்டமிட்டுள்ளது, தகுதியுள்ள முகமைகளிடமிருந்து விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ரூ.26.21 கோடி பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்தின் மூலம் பயனடைய விவசாயிகளுக்கு அமைச்சர் ர.வினோத் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், 2026-27 ஆம் ஆண்டுக்கு ரூ.26.21 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட "பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்" என்ற ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் பயனடையுமாறு வேளாண்மை அமைச்சர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் மகளிர் விவசாயிகள் தின கொண்டாட்டம்
சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டின் ஒரு பகுதியாக, மகளிர் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர.வினோத் தலைமையில் அக்டோபர் 15, 2026 அன்று சென்னை வேளாண்மை இயக்குநரகத்தில் மகளிர் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.
மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள், கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரைத் தொழிலின் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு 2025-26 அரவைப் பருவத்திற்கு கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை அறிவிப்பு
தமிழ்நாடு அரசு, 2025-2026 ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.603.34 கோடி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் டன் ஒன்றிற்கு ரூ.4,000 விலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் Whatsapp எண் மூலம் புகார் அளிக்கலாம்
நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ற்கு ஒன்றிய அரசால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/- ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் அல்லது பணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் 9500801465 அறிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின விவசாயிகளுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் வழங்க விருப்பக் கோரிக்கை
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகம், பழங்குடியின விவசாயிகள் மற்றும் குழுக்களுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழ் சேவைகளை வழங்க தகுதியான நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கைகளை (EoI) வரவேற்கிறது.
கே.எம்.எஸ் 2026-2027 பருவத்திற்கு சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600 என்ற உயர்த்தப்பட்ட விலையில் நெல் கொள்முதல்
நடப்பு கே.எம்.எஸ் 2026-2027-ம் பருவத்தில் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750/-, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600/- என்ற உயர்த்தப்பட்ட விலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இது வரை 42,082 மெ.டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன், மாநில அரசின் ஊக்கத் தொகையுடன் சேர்த்து இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி விடுமுறை நாட்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயிர்ம வேளாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மூன்று உழவர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை திரு.செ.நல்லசிவம், திரு.அ. சுப்பிரமணியன் மற்றும் திருமதி சாதனா ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.